/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்
/
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்
ADDED : மே 21, 2024 05:17 AM
பண்ருட்டி:' பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் இன்று நடக்கிறது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 14ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்து வருகிறது. நேற்று இரவு 7:00 மணிக்கு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
இன்று (21ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. அதையொட்டி, அதிகாலை 4:30 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர் அம்பாள் பெரியநாயகி, உற்சவர் திரிபுர சம்ஹாரமூர்த்தி சாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடக்கிறது.
காலை 6:30 மணிக்கு உற்சவர் திரிபுரி சம்ஹாரமூர்த்தி, தேரில் எழுந்தருள, பக்தர்கள் வடம் பிடிக்கின்றனர். கோவில் பிரதான வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு ஐதீக முறைப்படி தாரகாட்சகன், கமலாட்சன், வித்துன்மாலி ஆகிய 3 அசுரர்களை சிரிப்பால், சாமி முப்புரமெரித்த காட்சி நடக்கிறது.

