/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாத்தோப்பு பாலத்தில் திக்... திக்... விளக்கு வசதி கூட இல்லை
/
சேத்தியாத்தோப்பு பாலத்தில் திக்... திக்... விளக்கு வசதி கூட இல்லை
சேத்தியாத்தோப்பு பாலத்தில் திக்... திக்... விளக்கு வசதி கூட இல்லை
சேத்தியாத்தோப்பு பாலத்தில் திக்... திக்... விளக்கு வசதி கூட இல்லை
ADDED : ஏப் 23, 2024 05:26 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு 25 கண் மதகு குறுகிய பாலத்தில், விளக்கு வெளிச்சம் கூட இல்லாமல், வாகனங்கள் அடிக்கடி மோதி விபத்துக்குள்ளாவது தொடர்கிறது.
சென்னை- கும்பகோணம் சாலையில், சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை அருகே வெள்ளாறு ராஜன் வாய்க்கால் வடிகால் 25 கண் மதகு பாலம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட பழமையான பாலமாகும். இதன் வழியாக சென்னை, கும்பகோணம், விழுப்புரம், சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் 24 மணி நேரமும் சென்று வருகிறது. இப்பாலம் குறுகியதாக உள்ள நிலையில், பாலத்தினுள் ஒரே சமயத்தில் இரு கனரக வாகனங்கள் எதிர் எதிரே கடந்து செல்ல முடியாது. ஒரு வாகனம் பாலத்தை கடக்கும் வரையில் எதிரில் வரும் வாகனங்கள் நின்று செல்ல வேண்டும். காலம் காலமாக இந்நிலை உள்ளது. மேலும், இதுநாள் வரை பாலத்தில் விளக்கு அமைக்கப்படாமல், இப்பகுதி கும்மிருட்டாக மாறிவிடுகிறது.
இதனால், இரவு நேரங்களில் எதிரெதிரே வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. உயிரிழப்புகளும் நடந்துள்ளது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பாலம் பகுதியில் விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

