/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
/
சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
ADDED : மார் 27, 2024 07:22 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டையில் சிதம்பரம் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் அறிமுக கூட்டம் நடந்தது.
பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன், மாவட்ட சேர்மன் திருமாறன், மாவட்ட அவைத் தலைவர் குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
வேட்பாளர் சந்திரகாசனை, பாண்டியன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க.,கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் அறிமுகப்படுத்தி பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், சுந்தரமூர்த்தி, புவனகிரி துணை சேர்மன் வாசுதேவன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவ சிங்காரவேலு, கர்ணா, மாவட்ட பாசரை செயலாளர் சண்முகம், நகர செயலாளர்கள் மாரிமுத்து, தமிழரசன், செந்தில்குமார், துணை செயலாளர் அரிசக்திவேல், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், இளைஞரணி செயலாளர் வேல்முருகன், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், கல்யாணசுந்தரம், தே.மு.தி.க., நிர்வாகிகள் விஜய உமாநாத், ஆனந்தஜோதி, சுதாகர், பாலு, பானுசந்தர், எஸ்.டி.பி.ஐ., கட்சி நிர்வாகிகள் முகமது அலி, அப்துல் கபூர் உட்பட பலர், பங்கேற்றனர்.

