/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் தொகுதி ஓட்டு எண்ணும் மையம் ஆய்வு
/
சிதம்பரம் தொகுதி ஓட்டு எண்ணும் மையம் ஆய்வு
ADDED : ஏப் 09, 2024 05:42 AM

சிதம்பரம்: அரியலுாரில், சிதம்பரம் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை, கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதி அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் சிதம்பரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளிடக்கியது. இத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக, அரியலுார் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உள்ளார். அவர், தேர்தல் ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகிறார்.
அரியலுார் தத்தனுாரில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. அதையொட்டி, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் அறைகள், ஓட்டு பெட்டிகள் பாதுகாத்து வைக்கும் ஸ்ட்ராங் ரூம், தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, ஊடக மையம் ஆகியன அமைக்கப்பட்டு வருகிறது. பணிகளை, தேர்தல் நடத்தும் அ்லுவலர் ஆனிமேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, உடையார்பாளையம் டி.ஆர்.ஓ., ஷீஜா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) திருவருள், உதவி செயற்பொறியாளர்கள் தனவேல், ஜெயந்தி, ஜெயங்கொண்டம் தாசில்தார் கலிலுார் ரகுமான் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

