/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் சிதம்பரம் நகராட்சி அதிரடி
/
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் சிதம்பரம் நகராட்சி அதிரடி
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் சிதம்பரம் நகராட்சி அதிரடி
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் சிதம்பரம் நகராட்சி அதிரடி
ADDED : மே 07, 2024 04:20 AM
சிதம்பரம், : சிதம்பரம் நகர பகுதிகளில், ஒரு முறை பயன்படுத்தப்படும், பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
கடலுார் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்யும் நோக்கில், கலெக்டர் அருண்தம்புராஜ், மே 1ம் தேதி முதல் வியாபாரிகள் பயன்படுத்தக் கூடாது என, அறிவிப்பு வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று சிதம்பரம் நகர பகுதிகளில், நகராட்சி கமிஷனர் மல்லிகா தலைமையில், சுகாதார ஆய்வாளர் சுவாமிநாதன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு முறை பயன்படுத்தப்படும், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்தனர்.
இனி, இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.