/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறுவட்ட போட்டியில் சிதம்பரம் பள்ளி வெற்றி
/
குறுவட்ட போட்டியில் சிதம்பரம் பள்ளி வெற்றி
ADDED : செப் 12, 2024 06:15 AM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில், பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தது. முஸ்தபா பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர்.
இதில், 19 வயதிற்க்குட்பட்ட பிரிவில் நவாஸ்ஜான் குண்டு எறிதலில் முதலிடம், மாணவி மோல்வின் மோத்திஸ்ரீ இரண்டாம் இடம், 14 வயதிற்குட்பட்ட பிரிவில் தருண்ராஜ் இரண்டாம் இடம் பிடித்தனர்.
குழு போட்டிகளில் கைப்பந்து போட்டியில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட அனைத்து பிரிவுகளிலும் மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் அன்வர்அலி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தலைமை ஆசிரியர் சக்திவேல், உதவி தலைமை ஆசிரியர் ஞானவேல், பள்ளி பொறுப்பாளர்கள் பவானி, ஜெயசித்ரா உடற்கல்வி ஆசிரியர் முருகராவ் உடன் இருந்தனர்.