/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகத்தான திட்டங்கள் தந்த முதல்வர் அய்யப்பன் எம்.எல்.ஏ., நன்றி
/
மகத்தான திட்டங்கள் தந்த முதல்வர் அய்யப்பன் எம்.எல்.ஏ., நன்றி
மகத்தான திட்டங்கள் தந்த முதல்வர் அய்யப்பன் எம்.எல்.ஏ., நன்றி
மகத்தான திட்டங்கள் தந்த முதல்வர் அய்யப்பன் எம்.எல்.ஏ., நன்றி
ADDED : பிப் 23, 2025 05:32 AM

கடலுார்: கடலுாருக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், கடலுார் சட்டசபை தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. துணை முதல்வர் உதயநிதி ஆலோசனையின் பேரிலும், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் வழிகாட்டுதல்படியும், 2023- 24ம் ஆண்டில், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டப்பணிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகிறது.
இதில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் ரூ. 7.6 கோடி, கடலுார் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ. 14.36 கோடி, சில்வர் பீச் மற்றும் ராபர்ட் கிளைவ் நினைவு கோட்டை, நினைவு இல்லம் மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி மற்றும் கடலுார் தொகுதியில் அனைத்து வசதிகளும் நிறைந்த மாடல் பள்ளி உருவாக்க 56.47கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கடலுார் தொகுதிக்குட்பட்ட தென்பெண்ணையாறு மூலம் வெள்ளப்பெருக்கால் பாதிக்காத வகையில் ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க 9.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகள் மேற்கொள்ள பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே, கடலுார் தொகுதியில் திட்டங்களுக்கு நிதி வழங்கிவரும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.