/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் திட்ட முகாம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
முதல்வர் திட்ட முகாம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 04, 2024 12:20 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விஜயமாநகரம், பெரியவடவாடி, எருமனுார், கச்சிராயநத்தம், சித்தேரிகுப்பம் ஊராட்சிகளில் முதல்வர் திட்ட முகாமில், பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
தாசில்தார் உதயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் மலர் முருகன், துணை சேர்மன் பூங்கோதை கொளஞ்சி முன்னிலை வகித்தனர்.
பி.டி.ஓ., இப்ராஹிம் வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் மணிவேல், காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார் உட்பட ஊராட்சித் தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றனர்.அதில், ஊரக வளர்ச்சி, வருவாய், ஆதிதிராவிடர் நலன், வேளாண், தோட்டக்கலை, தொழிலாளர் நலன், சுகாதாரம், குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.