/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் திட்ட முகாம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
முதல்வர் திட்ட முகாம்: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஆக 29, 2024 07:02 AM

கடலுார்: கடலுார் ஊராட்சி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அய்யப்பன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
கடலுார் ஊராட்சி ஒன்றியம், கீழ் அழிஞ்சிப்பட்டு, கிளிஞ்சிகுப்பம், மேல் அழிஞ்சிப்பட்டு, மதலப்பட்டு, சிங்கிரிகுடி ஆகிய ஊராட்சிகளுக்கான 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம் ரெட்டிச்சாவடியில் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார். தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஊராட்சித் தலைவர்கள் கீழ் அழிஞ்சிப்பட்டு உமாராணி, மேல் அழிஞ்சிப்பட்டு இந்திரா விஜயன், மதலப்பட்டு சுகுமாறன், கிளிஞ்சிகுப்பம் மருது, முன்னாள் நிலவள வங்கித் தலைவர் ராமலிங்கம், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், வேலன் ஸ்டீல்ஸ் வேல்முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, நிர்வாகி அழகு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றனர்.