/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.எல்.ஏ., தலைமையில் முதல்வர் திட்ட முகாம்
/
எம்.எல்.ஏ., தலைமையில் முதல்வர் திட்ட முகாம்
ADDED : செப் 01, 2024 03:55 AM

கடலுார் : கடலுார் அடுத்த நல்லாத்துார், புதுக்கடை, காரணப்பட்டு, செல்லஞ்சேரி, கீழ் குமாரமங்கலம், தென்னம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடந்தது.
முகாமிற்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தாசில்தார் பலராமன், பி.டி.ஓ.,க்கள் வீரமணி, பிரபாகரன், ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதில், இலவச வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
அப்போது, ஊராட்சி தலைவர்கள் சரவணன், கனகராஜ், குமார், செல்வராஜ், தமிழரசி பிரகாஷ், ராஜேஸ்வரி பாலு, ஞானப்பிரகாசம், மனோகரன், துணைத் தலைவர்கள் பூங்காவனம் அழகப்பன், விஜயசாந்தி ராமதாஸ், சாந்தி பாலமுருகன், புவனேஸ்வரி மற்றும் நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், நிர்வாகிகள் கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர் வேலவன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.