/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் விழா பாதுகாப்பு பணி போலீஸ்காரர் 'ஜிப ே ' மூலம் லஞ்சம் வாங்கிய புகாரால் பரபரப்பு

ADDED : பிப் 26, 2025 05:01 AM
முதல்வர் பங்கேற்ற விழாவிற்கு வந்த, தி.மு.க., பிரமுகரிடம் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதியாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஜிபே மூலம் பணம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில், கடந்த 21ம் தேதி அரசு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தன. தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க.,வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கடலுார் கே.என்., பேட்டையில், நடராஜர் கோவில் அமைந்துள்ள நகரத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அவர், பண்ருட்டியில் இருந்து கடலுார் நோக்கி இருசக்கர வாகனங்களில் வந்த தி.மு.க.,வை சேர்ந்த ஒருவரை வழிமறித்து சோதனை செய்துள்ளார்.
அப்போது, அவரிடம் குடிபோதையில் இருப்பதாகவும், வழக்கு பதியாமல் இருக்க ஜிபே பார்கோடு ஸ்கேனர் மூலம் பணம் வாங்கியுள்ளார்.
இதை சக கட்சியினருக்கு, தி.மு.க., பிரமுகர் வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகார் குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இவர், கடந்த ஆண்டு கடலுாரில் பணிபுரிந்தபோது குடிபோதையில் வருபவர்களிடம் பணம் கேட்டு வாங்கி வந்துள்ளார். அந்த பணத்தை ஒரு ஓட்டல் ஊழியர் கணக்கில் அனுப்ப கூறி, பின் அவர் அதை பெற்றுவந்துள்ளார்.
இதையறிந்த இன்ஸ்பெக்டர் விசாரித்து எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.