/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எலி பேஸ்டில் பல் துலக்கிய குழந்தைகள் விருத்தாசலம் அருகே பரபரப்பு
/
எலி பேஸ்டில் பல் துலக்கிய குழந்தைகள் விருத்தாசலம் அருகே பரபரப்பு
எலி பேஸ்டில் பல் துலக்கிய குழந்தைகள் விருத்தாசலம் அருகே பரபரப்பு
எலி பேஸ்டில் பல் துலக்கிய குழந்தைகள் விருத்தாசலம் அருகே பரபரப்பு
ADDED : மே 26, 2024 05:50 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே எலி பேஸ்டில் பல் துலக்கிய குழந்தைகளுக்கு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருத்தாசலம் அடுத்த பி.கொட்டாரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 33. இவரது குழந்தைகள் ஜானுஷா,3; பாலமித்ரன்,2; இங்குள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக, மணிகண்டன் தங்கை அறிவழகி தனது மகள்கள் லாவண்யா,5; ரஷ்மிதா,2; ஆகியோருடன் வந்திருந்தார். நேற்றிரவு 7:30 மணியளவில், வீட்டில் விளையாடிய சிறுவர்கள் அங்கிருந்த எலி பேஸ்டில், பல் துலக்கி கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்ட அறிவழகி, உறவினர்களிடம் கூறினார்.
உடன், சிறுவர்கள் 4 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்காக அழைத்து சென்று அங்கு முதலுதவி அளித்தனர்.
பின்னர் இரவு 10:20 மணிக்கு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஆலடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.