/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சின்னநற்குணம் கோவில் கும்பாபிேஷகம்
/
சின்னநற்குணம் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 11, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சின்னநற்குணம் கிராமத்தில் ஐயனார் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு அருகே சின்னநற்குணம் கிராமத்தில் பூரணி புஷ்கலாம்பிகை சமேத ஐயனார் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கற்பக விநாயகர், புற்றுமாரியம்மன், வீரபத்திரசாமி கோவில்கள் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. பூஜைகள் கடந்த 8 ம் தேதி துவங்கியது.
கும்பாபிேஷக தினமான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலையும், 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது.
ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.