/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்து பணிமனையில் சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்
/
போக்குவரத்து பணிமனையில் சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 11, 2024 12:19 AM

கடலுார்: கடலுார் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் சி.ஐ.டி.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் தேவராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில்,போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும்.
வரவுக்கும், செலவுக்கும் உள்ள வித்தியாசத் தொகையை அரசு முறையாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பண பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
துணை பொது செயலாளர்கள் கண்ணன், ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.