ADDED : மே 02, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் துறைமுகம் பெரிய கடைத்தெருவில், மாவட்ட வணிகர் சங்க கட்டடத்தில் மே தின விழா நடந்தது.
மாவட்டத் தலைவர் முத்துக்குமரனார் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ரவிக்குமார், பொதுச் செயலாளர் காத்தப்பன் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் சுந்தர் வரவேற்றார். இதில், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பக்கிரி ராஜா, முகமது சாதிக், ஆய்வாளர் (பொறுப்பு) வெங்கடேசன் மற்றும் துப்புரவு பணியாளர்களை வணிகர் சங்க தலைவர் முத்துக்குமரனார் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
அப்போது, வணிகர் சங்க தொடர்பாளர் வெங்கடேசன் மற்றும் முருகன், ஜோதி, முஸ்தபா, கதிரவன், ரவி, அபிநயா, கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

