ADDED : ஏப் 30, 2024 05:51 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் கோவிலில், வேலூர் மாவட்ட ஜலகண்டேஸ்வரர் கோவில் குழுவினர் சார்பில், திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் நிர்வாகி ரேணுகா, சிவசரவணன் உள்ளிட்ட நூற்றுக் கும் மேற்பட்ட சிவனடியார்கள், இசை வாத்தியங் களுடன் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர், காலை 7.00 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி மாலை 4:00 வரை நடந்தது.
இதில் கோவில் டிரஸ்டி பசவராஜ், இந்து ஆலய பாதுகாப்பு குழு தலைவர் செங்குட்டுவன், செயலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிதம்பரம் அர்த்தஜாம அடியார் ரங்கசாமி செய்தார்.
