தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வி.சி., மாநாடு:டாஸ்மாக் மூடல்

வி.சி., மாநாடு:டாஸ்மாக் மூடல்

வி.சி., மாநாடு:டாஸ்மாக் மூடல்


UPDATED : ஆக 17, 2026 10:27 PM

ADDED : ஆக 17, 2026 09:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2026 10:27 PM ADDED : ஆக 17, 2026 09:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்:வி.சி., மாநாட்டையொட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள 6 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

வி.சி., கட்சி சார்பி்ல் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடந்தது. இதில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வேன், கார், பஸ்களில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணித்து வி.சி., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், பாதுகாப்பு கருதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட போலீசார் உத்தரவிட்டனர். அதன்படி, தொழுதூர்-2, வேப்பூர்-2, ஆவட்டி மற்றும் அடரியில் தலா ஒரு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இதனால், மதுப்பிரியர்கள், வி.சி., தொண்டர்கள் மதுபானம் கிடைக்காமல் அவதியடைந்தனர். இதனை பயன்படுத்தி வேப்பூரிலுள்ள தனியார் மதுபான கூடத்தில் ஒரு குவாட்டருக்கு ரூ., 50 அதிகமாக விற்பனை செய்து கல்லா கட்டினர்.

இது குறித்து புகாரில் வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us