/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் கோப்பை போட்டி மாணவர்கள் விழிப்புணர்வு
/
முதல்வர் கோப்பை போட்டி மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : ஆக 29, 2024 11:21 PM

கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரியில், தேசிய விளையாட்டு விழா மற்றும் முதல்வர் கோப்பை போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவியர் 4500 பேர் இணைந்து, சி.எம்., டிராபி, பெரியார் அரசு கல்லுாரி என்ற வடிவில் அமர்ந்து முதல்வர் கோப்பை போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக முதற்கட்டமாக 450 மாணவ, மாணவியர் முன்பதிவு செய்தனர்.
அப்போது, கல்லுாரி துறைத் தலைவர்கள், விளையாட்டு துறை இயக்குனர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.