/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: 22,000 பேர் பதிவு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: 22,000 பேர் பதிவு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: 22,000 பேர் பதிவு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: 22,000 பேர் பதிவு
ADDED : செப் 05, 2024 04:14 AM
திட்டக்குடி : தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க, கடலுார் மாவட்டத்திலிருந்து 22ஆயிரத்து 82 பேர் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டுவருகிறது.
நடப்பாண்டிற்கான போட்டிகள் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடக்க உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர். பதிவு செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்டு 25ம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க செப்.2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி கடலுார் மாவட்டத்தில் இருந்து முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் பிரிவில் 12ஆயிரத்து 537பேர், கல்லுாரி மாணவர்கள் பிரிவில் 6ஆயிரத்து 33பேர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 788பேர், அரசு ஊழியர்கள் பிரிவில் 722பேர், பொதுமக்கள் பிரிவில் 2ஆயிரத்து2 பேர் என மொத்தம் 22ஆயிரத்து 82பேர் பதிவு செய்துள்ளனர்.
மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
குழுப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்பரிசாக தலா 75ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக தலா 50ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக தலா 25ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது. நடப்பாண்டில் நடத்தப்படும் போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை 37கோடி ரூபாய்.
இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.