/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்
/
வேப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்
ADDED : மார் 05, 2025 05:08 AM

வேப்பூர்: முதல்வர் பிறந்தநாளையொட்டி, நல்லூர் ஒன்றிய தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வேப்பூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, நல்லூர் தி.மு.க., ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய துணைச் செயலர் மாரிமுத்தாள் குணா, ஒன்றிய பொருளாளர் வெங்கடாசலம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் தனசேகர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் குணா வரவேற்றார்.
தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சேகர், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் பாபு, நெசவாளரணி மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன், தி.மு.க., நிர்வாகிகள் ஜெயபால், பன்னீர்செல்வம், அரீசன், மணிவேல், சண்முகம், மாயவேல், செந்தில்குமார், மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். இதில், கட்சி கொடியேற்றி இனிப்புகள் மற்றும் அண்ணதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. இதேபோன்று, நல்லுார், நிராமணி ஆகிய பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.