/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு மருந்தகத்தில் இணை பதிவாளர் ஆய்வு
/
கூட்டுறவு மருந்தகத்தில் இணை பதிவாளர் ஆய்வு
ADDED : செப் 06, 2024 12:36 AM

கடலுார்: கடலுார் மாவட்ட சரவணபவ நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின், கூட்டுறவு மருந்தகத்தை மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
மருந்துகள் கொள்ளுதல் செய்த தேதி, காலாவதி தேதி, விற்பனை விவரங்கள் மற்றும் விற்பனை விலையில் 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்து விற்கப்படும் விவரங்களை ஆய்வு செய்தார். மேலும், கூட்டுறவு மருந்தகங்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் விற்பனை செய்ய வேணடும். 20 சதவீத தள்ளுபடி வழங்குதல், டோர் டெலிவரி செய்தல் தொடர்பான விவரங்களை விளம்பரம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு மருந்தகம் மூலம் சிறப்பான சேவை வழங்க அறிவுறுத்தினார்.
சரவணபவ கூட்டுறவு பண்டகசாலை மேலாண் இயக்குநர் இம்தியாஸ், கூட்டுறவு சார் பதிவாளர்கள் புருேஷாத்தமன், வேல்முருகன் உடனிருந்தனர்.