
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே புதிதாக கட்டப்படும் வீட்டில் அடுக்கி வைத்திருந்த செங்கற்களில் புகுந்த நாக பாம்பு மீட்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டைச் சேர்ந்தவர் அருள்தாஸ். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக அங்கு செங்கற்கள் அடுக்கி வைத்திருந்தார்.
நேற்று கட்டட பணியாளர்கள் அந்த செங்கற்களை எடுத்த போது அதில் நாக பாம்பு இருந்ததைப் பார்த்த அலறியடித்து ஓடினர்.
தகவலறிந்த வரக்கால்பட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிருபாகரன், அங்கு சென்று 5 அடி நீளமுள்ள நாக பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டார்.

