/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இருப்புக்குறிச்சியில் மண் மாதிரி சேகரிப்பு
/
இருப்புக்குறிச்சியில் மண் மாதிரி சேகரிப்பு
ADDED : மே 02, 2024 06:24 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சியில், வேளாண் மாணவர்கள் சார்பில் மண் மாதிரி சேகரிப்பு நடந்தது.
திருவண்ணாமலை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலத்தில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அவர்கள், விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி கிராமத்தில் உள்ள விவசாயி சுவிக்கின் நிலத்தில் மண் மாதிரியை சேகரித்தனர்.
அப்போது, மண் மாதிரி சேகரிப்பு முக்கியத்துவம், மண் மாதிரி எடுக்கும் முறைகள் குறித்து வேளாண் மாணவர்கள் கோகுல், சரண்நிதிஷ், சரவணன் ஆகியோர் விளக்கமளித்தனர். சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய ஆய்வு கூடத்திற்கு எடுத்து வரப்பட்டது.

