/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் அ.தி.மு.க, வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு
/
சிதம்பரத்தில் அ.தி.மு.க, வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு
சிதம்பரத்தில் அ.தி.மு.க, வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு
சிதம்பரத்தில் அ.தி.மு.க, வேட்பாளருக்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 04, 2024 12:50 AM

சிதம்பரம்: சிதம்பரம் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனை ஆதிரித்து, சிதம்பரம் நகரம் மற்றும் கிள்ளை பகுதிகளில் அக்கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரத்தில் நேற்று காலை தில்லைக்காளி கோவிலில், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செம்மலை தலைமையில், மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., அமைப்பு செயாளர் முருகுமாறன் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை துவக்கினர். பின்னர் நகர பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.
தொடர்ந்து, பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றியம், பள்ளிப்படை கீழச்சாவடி, மடுவங்கரை, கிள்ளை பேரூராட்சி பகுதிகளில் பிரசாரம் செய்தனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், அவைத் தலைவர் குமார், பொருாளர் சுந்தர், நகர செயலாளர் செந்தில்குமார், சண்முகம், தில்லைகோபி, சுரேஷ்பாபு, தில்லை செல்வம், பன்னீர், சேகர், நகர துணை தலைவர் அரிசக்தி, யேசுராஜ், சங்கர், வீரமணி, ஒன்றிய செயலாளர் அசோகன், கிள்ளை பேரூராட்சி செயலாளர் தமிழரசன், மாவட்ட துணை செயலலாளர் தேன்மொழி, வசந்த் மற்றும் பலர் பங்கேற்றனர்.

