/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
/
பண்ருட்டி பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 01, 2024 05:11 AM

பண்ருட்டி பண்ருட்டியில் நகராட்சி மார்க்கெட்டில் புதியதாக கட்டப்பட உள்ள நிலையில், இடத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தாசில்தார் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், காய்கறி மார்க்கெட் பகுதியில் சேதமடைந்துள்ள கடைகளை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து, பஸ் நிலையத்தில் கடலுார் பஸ் நிறுத்தும் இடங்களில் நிழற்குடை ஏற்படுத்துதல், தகரகொட்டகை உள்ள கடைகள் கான்கிரீட் கடைகளாக மாற்றிட உள்ள பகுதியை ஆய்வு செய்தார்.
எல்.என்.புரம் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில், தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
இதில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், துணை சேர்மன் சிவா, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஆனந்தி, பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், சுகாதார அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.