/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரி பேராசிரியர்கள் கையெழுத்து இயக்கம்
/
கல்லுாரி பேராசிரியர்கள் கையெழுத்து இயக்கம்
ADDED : ஆக 29, 2024 11:14 PM

கடலுார: கடலுார் அரசு பெரியார் கல்லுாரி பேராசிரியர்கள் கோரி்க்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள 4,000 பேராசிரியர் பணியிடங்கள், 110 நுாலகர் பணியிடங்கள், 80 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஈட்டிய விடுப்பு சரண் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம் சார்பில் கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் கையெழுத்து இயக்கம்நடந்தது.
கடலுார் கிளை தலைவர் திலக்குமார் தலைமை தாங்கினார். கிளைச் செயலர் சேதுராமன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ராஜகுமார், இணைச் செயலர் ராஜலெட்சுமி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஹென்றி, பாவாடை, வேணி உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏராளாமான பேராசிரியர்கள் பங்கேற்று கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர்.
கோரிக்கை மனுக்கள் உயர்கல்வித் துறை அமைச்சர், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் மற்றும் கல்லுாரிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.