
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: வன்னியர் சங்க இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த, தியாகிகளின் நினைவாக கட்டப்பட்ட நினைவுத்தூண் திறக்கப்பட்டது.
புதுச்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே வன்னியர் சங்க இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த வில்லியநல்லூரை சேர்ந்த ராஜேந்திரனுக்கு நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியின் போது, நினைவுத்தூண் அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், புதிய நினைவுத்தூண் அதே பகுதியில் மாற்று இடத்தில் அமைக்கப்பட்டது.
அந்த நினைவு துாண் நேற்று காலை திறக்கப்பட்டது. முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகிகள் இளங்கோவன், சிவசங்கரன், முருகேசன், நடராஜன், ராஜவேல், சங்கர், கருணாமூர்த்தி, வெங்கடேச பெருமாள், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வில்லியநல்லூர் ராதாகிருஷ்ணன் செய்தார்.