/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இந்திய கம்யூ., சட்ட நகல் எரிப்பு போராட்டம்
/
இந்திய கம்யூ., சட்ட நகல் எரிப்பு போராட்டம்
ADDED : ஆக 10, 2024 05:37 AM

கடலுார்: கடலுார் ஜவான்ஸ் பவன் அருகில், இந்திய கம்யூ., கட்சி சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
மாநகர செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். துணை செயலாளர் முருகன், முன்னாள் மாவட்ட குழு ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் துரை, துணை செயலாளர் குளோப், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில், பா.ஜ., அரசை கண்டித்தும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் சட்ட நகல்களை எரித்து கோஷம் எழுப்பினர்.
அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சட்ட நகல்களை எரித்த இந்திய கம்யூ., கட்சியினர் 13 பேரை கைது செய்தனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த போராட்டத்திற்கு வட்ட பொறுப்பு செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட நிர்வாகக்குழு முருகையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து, சட்ட நகலை எரிக்க முயன்றவர்களை இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து, 3 பெண்கள் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்து, 3 ஆட்டோக்களில் அழைத்துச் சென்றனர்.

