/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாத்துக்கூடலில் சமுதாய நலக்கூடம் கலெக்டரிடம் பஞ்., தலைவர் மனு
/
சாத்துக்கூடலில் சமுதாய நலக்கூடம் கலெக்டரிடம் பஞ்., தலைவர் மனு
சாத்துக்கூடலில் சமுதாய நலக்கூடம் கலெக்டரிடம் பஞ்., தலைவர் மனு
சாத்துக்கூடலில் சமுதாய நலக்கூடம் கலெக்டரிடம் பஞ்., தலைவர் மனு
ADDED : ஜூலை 06, 2024 05:02 AM

விருத்தாசலம்: சாத்துக்கூடல் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைத்துதரக்கோரி, கலெக்டரிடம் ஊராட்சித் தலைவர் சக்திவேல் மனு கொடுத்தார்.
விருத்தாசலம் ஒன்றியம், சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல், கலெக்டர் அருண் தம்புராஜை நேரில் சந்தித்து கொடுத்த மனுவில் கூறியதாவது: சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சியில் சுமார் 2,000 ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் இல்ல நிகழ்வுகளுக்கு திருமண மண்டபம் இல்லாமல், மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு போதிய இட வசதி உள்ளது. எனவே, அயோத்திதாசர் பண்டிதர் திட்டத்தின் கீழ் 2024 -25ம் ஆண்டிற்கு சாத்துக்கூடல் கீழ்பாதி ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அருண் தம்புராஜ், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.