ADDED : மே 28, 2024 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம், : அண்ணாமலைப் பல்கலையில் தமிழியல் துறைத் தலைவர் பிலவேந்திரன், இந்தித்துறை தலைவர் காமகோடி ஆகியோருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.
இந்திய மொழிப்புலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வெங்கடேசன் வரவேற்றார்.
புல முதல்வர் பாரி தலைமை தாங்கினார். துணைவேந்தர் கதிரேசன், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினர். கல்லுாரி வளர்ச்சிக்குழு பேராசிரியர் கண்ணப்பன், கலைப்புல முதன்மையர் விஜயராணி மற்றும் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பேராசிரியர் ஜெகநாத ரெட்டி நன்றி கூறினார்.