ADDED : ஏப் 26, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அருகே குமுடி மூலை நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, தலைமை ஆசிரியை ராஜலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியர் தமிழ்மதி வரவேற்றார்.
ஆசிரியர் முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் துரைமணி ராஜன், கிராம நிர்வாகி நடராஜன் முன்னிலை வகித்தனர்.
வட்டாரக் கல்வி அலுவலர் செல்வி, ஊராட்சி தலைவர் ஞானசவுந்தரி ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் சேகரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பிற பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் சீத்தா, மோகன்ராஜ், கீதா, மரியஜோசப்ராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி பேசினர். ஆசிரியர் சேகர் ஏற்புரையாற்றினார்.

