ADDED : ஏப் 27, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரில், ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில், ஓய்வு பெற்ற 11 ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார் வட்டார கல்வி அலுவலர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.
உத்தமசோழமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரமிளா வரவேற்றார்.
இந்த கல்வியாண்டில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் அசோக், செல்வராஜ், சசிகலா, ஹேமலதா, ரமணி, முருகன், கயல்விழி, சித்ரா, ராம்குமார், ஜெயசொர்ண வசுமதி தேவி, உஷா ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

