/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு
/
பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு
ADDED : மே 30, 2024 05:49 AM

சிதம்பரம்: ராகவேந்திரா கல்லுாரியில் பேராசிரியருக்கான மாநில தகுதி தேர்வு பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது.
சிதம்பரம் கீழமூங்கிலடி கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில், பேராசிரியர்களுக்கான மாநில தகுதி தேர்வு பயிற்சி வகுப்பு நடந்தது. 4 நாட்கள் நடந்த பயிற்சி வகுப்பு நிறைவு விழா நேற்று நடந்தது. கல்லூரி செயலர் பாபு தலைமை தாங்கினார். கல்லூரி கல்வி அதிகாரி அசோக்குமார் பயிற்சி வகுப்பின் அறிக்கை வாசித்தார். ஏ.வி.சி., கல்லூரி முன்னாள் முதல்வர் தியாகேசன் சிறப்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் மாலதி நன்றி கூறினார்.
ஒருங்கிணைப்பாளர் திலகவதி பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்தார்.
இப்பயிற்சியில் உதவி பேராசிரியர் முரளிதரன், இணை பேராசிரியர் சாஹிர் உசேன், ஜமால் முகமது ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியில் ஆசிரியர்கள் முன்னாள் மற்றும் இந்நாள் இறுதி ஆண்டு மாணவர்கள் பங்கேற் றனர்.