ADDED : ஜூலை 22, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: ஜான்டூயி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணிணி அறிவியல் துறை மன்ற துவக்க விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை ஜான்டூயி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணிணி அறிவியல் துறை மன்ற துவக்க விழா கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தலைவர் வீரதாஸ் தலைமை தாங்கினார். கணிணி அறிவியல் துறை தலைவர் வசந்தகுமாரி வரவேற்றார்.
விழாவில், திருவெண்ணெய்நல்லுார் அரசு கலை அறிவியல் கல்லுாரி கணிணி துறை தலைவர் புவனேஸ்வரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் கல்லுாரி இயக்குனர் வேலண்டினாலெஸ்லி, முதல்வர் மகாலட்சுமி, பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
