/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓடும் பஸ்சில் கண்டக்டர் மாரடைப்பால் சாவு
/
ஓடும் பஸ்சில் கண்டக்டர் மாரடைப்பால் சாவு
ADDED : மே 16, 2024 11:57 PM

கடலுார்: கடலுாரில், கரூர் நோக்கி சென்ற அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
புதுச்சேரியில் இருந்து நேற்று காலை கும்பகோணம் கோட்ட அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு கரூருக்கு புறப்பட்டது. கரூரை சேர்ந்த கோபால்ராஜூ டிரைவராகவும், பன்னீர்செல்வம்,47; கண்டக்டராக பணியில் இருந்தனர்.
கண்டக்டர் பன்னீர்செல்வம், பயணிகளுக்கு டிக்கெட் போட்டுவிட்டு டிரைவரின் பக்க வாட்டில் உள்ள அவரது சீட்டில் அமர்ந்து வந்தார்.
காலை 8:00 மணிக்கு பஸ் கடலுார் மஞ்சக்குப்பம் வந்தபோது கண்டக்டர் பன்னீர்செல்வம் திடீரென மயங்கி விழுந்தார்.
உடன் டிரைவர் கோபால்ராஜூ தாமதிக்காமல் பயணிகளுடன் பஸ்சை கடலுார் அரசு மருத்துவமனைக்குள் நேராக ஓட்டி சென்றார். அங்கு, பன்னீர்செல்வத்தை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் கடலுார் அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது.
பின்னர் டிரைவர் கோபால்ராஜூ, பஸ்சை கடலுாரில் உள்ள விழுப்புரம் கோட்ட போக்குவரத்து கழக பணிமனைக்கு கொண்டு சென்று விபரத்தை கூறினார். அதனைத் தொடர்ந்து மாற்று டிரைவர் மற்றும் கண்டக்டரை நியமித்து பஸ் கரூருக்கு புறப்பட்டு சென்றது.
கண்டக்டர் இறந்தது குறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

