ADDED : ஜூலை 12, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து, பெண்ணாடத்தில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, நகர தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
மாநில எஸ்.சி., பிரிவு துணைத் தலைவர் ராமலிங்கம், ஐ.என்.டி.யூ.சி., தொழிற்சங்கம் அழகேசன் முன்னிலை வகித்தனர். இறையூர் கந்தசாமி வரவேற்றார். நிர்வாகிகள் நல்லதம்பி, கொளஞ்சி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், காங்., மாநில தலைவர் செல்வபெருந்தையை அவதுாறாக பேசிய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
திருமலை அகரம் பாஸ்கரன் நன்றி கூறினார்.