/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களின் குறைகள் தீர்க்கப்படும் காங்., விஷ்ணுபிரசாத் உறுதி
/
மக்களின் குறைகள் தீர்க்கப்படும் காங்., விஷ்ணுபிரசாத் உறுதி
மக்களின் குறைகள் தீர்க்கப்படும் காங்., விஷ்ணுபிரசாத் உறுதி
மக்களின் குறைகள் தீர்க்கப்படும் காங்., விஷ்ணுபிரசாத் உறுதி
ADDED : ஜூன் 05, 2024 03:25 AM
கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதியில் வென்ற காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத், தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தலில் ஜனநாயகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நடந்த யுத்தத்தில் தமிழக மக்கள் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு தங்களின் ஆதரவை முழுமையாக ஜனநாயக பக்கம் திருப்பினர். இதன் மூலமாக பிரதமர் மோடிக்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.
என்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடலுார் தொகுதி மக்களுக்காக உழைக்க காத்துக் கொண்டிருக்கிறேன். மக்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என, தெரிவித்தார்.