/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாகிராம ஒன்றிய பகுதிகளில் காங்., விஷ்ணுபிரசாத் ஓட்டு சேகரிப்பு
/
அண்ணாகிராம ஒன்றிய பகுதிகளில் காங்., விஷ்ணுபிரசாத் ஓட்டு சேகரிப்பு
அண்ணாகிராம ஒன்றிய பகுதிகளில் காங்., விஷ்ணுபிரசாத் ஓட்டு சேகரிப்பு
அண்ணாகிராம ஒன்றிய பகுதிகளில் காங்., விஷ்ணுபிரசாத் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 09, 2024 05:44 AM

பண்ருட்டி: அண்ணாகிராமம் ஒன்றிய பகுதி கிராமங்களில் கடலுார் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் 'கை' சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கடலுார் தொகுதி காங், வேட்பாளர் விஷ்ணுபிரசாத் நேற்று அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், எழுமேடு கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தை துவக்கினர்.
அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் வெங்கட்ராமன், வி.சி., கட்சி ஒன்றிய செயலாளர் கோபால்வாசன், மா.கம்யூ., சிவக்குமார், மோகன், காங்., மாவட்ட தலைவர் திலகர், ம.தி.மு.க.ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார்.
நேற்று நரிமேடு, சன்னியாசிப்பேட்டை, பாலுார் பி.வி.நத்தம், கீழ்அருங்குணம், சுந்தரவாண்டி எய்தனுார், நத்தம், சித்தரசூர், அகரம், பி.என்.பாளையம், கொங்கராயனுார், கோழிப்பாக்கம், பகண்டை, கீழ்கவரப்பட்டு, மேல்கவரப்பட்டு, மாளிகைமேடு, திராசு, தட்டாம்பாளையம். மேல்குமாரமங்கலம், புலவனுார், கண்டரக்கோட்டை, பூண்டி, கள்ளிப்பட்டு, திருத்துறையூர், அக்கடவல்லி, கொரத்தி, கரும்பூர், எனதிரிமங்கலம், காவனுார், டைத்தாம்பாடி, அவியனுார், ஏ.பி.குப்பம், ஒறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தனர்.

