/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டு எண்ணிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்
/
ஓட்டு எண்ணிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்
ADDED : மே 19, 2024 04:28 AM
கடலுார் : லோக்சபா தொகுதிக்குட்பட்ட கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளின் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் கடலுார், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி நடக்கிறது.
ஓட்டு எண்ணிக்கை குறித்து போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் ஓட்டு எண்ணிக்கை மைய முகவர்கள் ஆலோசனை கூட்டம் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், நேர்முக உதவியாளர் ரவி, தேர்தல் தாசில்தார் தமிழ்செல்வன் மற்றும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, சுயேச்சை வேட்பாளர்கள், கட்சி முகவர்கள் காங்., புகழேந்தி, பா.ம.க., முத்துக்கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி சாமி ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஓட்டுகள் எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், வேட்பாளர்கள், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து விளக்கப்பட்டது.

