/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை
/
கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை
ADDED : செப் 04, 2024 07:52 AM
புதுச்சேரி, : 'துாய்மைக்கான சேவை' பணிகளை ஒருங்கிணைக்கும் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.
புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர்கள், உள்ளாட்சித் துறை துணை இயக்குனர், அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 'துாய்மைக்கான சேவை' இயக்கத்தின் மூலம் மக்களின் அன்றாட வாழ்வில் முறைமைப்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
'துாய்மைக்கான பொறுப்பு' விரிவான செயல் திட்டங்களை வகுக்குமாறு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
வரும் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடக்கும் துாய்மை இயக்க பணிகளை பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்களிப்போடு செய்திட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.