ADDED : மே 07, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: பண்ருட்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஏற்கனவே வகித்த, நகராட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார்.
பண்ருட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மோகன் வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே பண்ருட்டி நகராட்சி 24 வது வார்டு கவுன்சிலராகவும், நகராட்சி கவுன்சில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். இவர் தற்போது எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளதால் அரசியலமைப்பு சட்டப்படி இரு பதவிகளில் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்நிலையில் நேற்று நகராட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அவர், பண்ருட்டி நகராட்சி கமிஷ்னர் காஞ்சனாவிடம் வழங்கினார்.
