/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுக்கு பணம் கொடுக்க கணக்கெடுக்கும் கட்சியினர்
/
ஓட்டுக்கு பணம் கொடுக்க கணக்கெடுக்கும் கட்சியினர்
ADDED : ஏப் 01, 2024 06:23 AM
மந்தாரக்குப்பம், : ஓட்டுக்கு பணம் கொடுக்க மாற்று குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களின் விபரங்களை சேகரிக்கும் பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரம் தீவரமடைந்து வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக மந்தாரக்குப்பம் பகுதியில் திருவள்ளுவர் நகர், பெரியார் நகர், ஐ.டி.ஐ. நகர், ஒம்சக்தி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் கையகப்படுத்தப்பட்டது.
இப்பகுதிகளில் வசித்த 500க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள பகுதிகளில் மாற்று இடங்களில் வசித்து வருகின்றனர்.
அவர்களுடைய ஓட்டு புவனகிரி தொகுதி பழைய ஓட்டுச்சாவடியில் இருப்பதால் அரசியல் கட்சியினர் மாற்று இடத்திற்கு சென்ற அவர்கள் தற்போது எங்கு வசிக்கின்றனர் என்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
இந்த கணக்கெடுப்பு தங்களுக்கு எத்தனை ஓட்டுகள் உள்ளன. எத்தனை ஒட்டுக்கு பணம் கொடுக்க நேரிடும் என்ற புள்ளி விபரத்துக்காக விபரங்கள் சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

