/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் மந்தையாக மேயும் மாடுகள் வாகன ஓட்டிகள் கடும் அவதி

ADDED : மே 26, 2024 05:51 AM

பண்ருட்டி: பண்ருட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான மாடுகள் மேய்வதால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு, காடாம்புலியூர், கொஞ்சிக்குப்பம், கொள்ளுக்காரன்குட்டை போன்ற இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே 100க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன.
மாலை 4:00 மணி முதல் இரவு நேரங்களில் சாலையில் மாடுகள் படுத்து உறங்குவதும் கூட்டமாக நிற்பதும் வாடிக்கையாக உள்ளது.
இதுபோன்று கேட்பாரற்று மேயும் மாடுகள் குறித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்று மாடுகள் சகட்டுமேனிக்கு திரிவதால் அடிக்கடி இரு சக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இதுபோன்று மேயும் மாடுகளை ஊராட்சி நிர்வாகம் பிடித்து பட்டியில் அடைத்து மாட்டின் உரிமையாளர்களிடம் அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.