தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிரியேட்டிவ் ரைட்டர்ஸ்  7வது ஆண்டு நிறைவு விழா

கிரியேட்டிவ் ரைட்டர்ஸ்  7வது ஆண்டு நிறைவு விழா

கிரியேட்டிவ் ரைட்டர்ஸ்  7வது ஆண்டு நிறைவு விழா


ADDED : மே 31, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: திருச்சியில் கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் 7வது ஆண்டு நிறைவு விழா நடந்தது. 

கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் நிறுவனரான, மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் பிருந்தா தலைமை தாங்கினார். டாக்டர்கள் லோகநாதன், மனோகரன் மற்றும் சுப்புராமன் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணை இயக்குநர் (தொழிற்கல்வி) ஜெயக்குமார், கலந்து கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 70 ஆசிரியர்கள், 50 மாணவ, மாணவிகள் எழுதிய ‘அ முதல், ஆஹா’ வரை, டிங்குவின் கதைகள், எண்ணத்தின் மொழி, எனது பேனா, இணைந்த கரங்கள், சிறுதுளி ராகங்கள் என பல்வேறு தலைப்புகளில் 120 புத்தகங்களை வெளியிட்டார். 

எழுத்தாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 365 நாட்கள் எழுத்துப் பணியை நிறைவு செய்த எழுத்தாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இணையவழிக் கவிதைப் போட்டியின் முடிவுகள் வெளியிடப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஆசிரியர் மும்தாஜ் பேகம் செய்திருந்தார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us