/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் சில்வர் பீச்சில் அலைமோதிய கூட்டம்
/
கடலுார் சில்வர் பீச்சில் அலைமோதிய கூட்டம்
ADDED : மே 07, 2024 04:29 AM

கடலுார் : கோடை வெயில் சுட்டெரிப்பதால், கடலுார் சில்வர் பீச்சில் நேற்று மாலை மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் சென்னை மெரினா பீச்சிற்கு அடுத்து, கடலுார் சில்வர் பீச் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய பொழுது போக்கு இடமாக உள்ளது.
மிக அழகான நீளமான கடற்கரையான சில்வர் பீச் மாவட்ட மக்களின் சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் வெயில் சதம் அடித்து, அனல் காற்று வீசி வருகிறது.
இதனால், பகல் நேரங்களில் வீடுகளில் முடங்கும் மக்கள், மாலை நேரங்களில் வீடுகளில் இருந்து வெளியேறி சில்வர் பீச், பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், நேற்று மாலை சில்வர் பீச்சில் மக்கள் குவிந்தனர். சிறுவர்கள் முதல், இளைஞர்கள் வரை கடலில் குளித்து மகிழ்ந்தனர்.