/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.2,000 கோடி முதலீட்டில் கடலுார் துறைமுகம் மேம்பாடு
/
ரூ.2,000 கோடி முதலீட்டில் கடலுார் துறைமுகம் மேம்பாடு
ரூ.2,000 கோடி முதலீட்டில் கடலுார் துறைமுகம் மேம்பாடு
ரூ.2,000 கோடி முதலீட்டில் கடலுார் துறைமுகம் மேம்பாடு
ADDED : பிப் 26, 2025 01:23 AM
கடலுார்:கடலுார் துறைமுகத்தை, பசுமை துறைமுகமாக மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக கடல் சார் வாரியம், 1,500 கோடி முதல் 2,000 கோடி வரை முதலீட்டுடன் விரைவில் பணி துவங்க உள்ளது.
ஆசியாவில் உள்ள பழமையான துறைமுகங்களில் கடலுார் துறைமுகமும் ஒன்று. சென்னை அடுத்த எண்ணுார், காட்டுப்பள்ளி, துாத்துக்குடி துறைமுகங்கள் ஏற்றுமதி, இறக்குமதியில் தடம் பதித்த பின்னர், கடலுார் துறைமுகம் பொலிவிழந்தது.
இத்துறைமுகம், 142 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கரையிலிருந்து, 1 மைல் துாரத்திலேயே இயற்கையாகவே, 15 மீட்டர் ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக உள்ளது. அத்துடன் எல்லா காலங்களிலும் ஏற்றுமதி, இறக்குமதிக்கு உகந்த துறைமுகமாக இருந்த நிலையில், 25 ஆண்டு காலமாக கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
தற்போது, இந்த துறைமுகத்தை பசுமை துறைமுகமாக மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, தமிழக கடல் சார் வாரியம் 1,500 கோடி முதல் 2,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யவுள்ளது. தனியார் பங்களிப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்துதல், கப்பல் அணையும் இடத்தில், 15 மீட்டர் வரை ஆழப்படுத்துதல், கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை சேமித்து வைக்க கிடங்குகள் அமைத்தல் போன்ற பணிகள் செய்யப்பட உள்ளன.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வினியோகம் செய்ய, பிரத்யேக முனையம் அமைத்தல், இறக்குமதி பொருட்களை வைப்பதற்காக பண்டகசாலை அமைத்தல், தொழில் சார்ந்த உற்பத்தி அலகு, சூரிய ஒளி, காற்றாலை நிறுவுதல், சொகுசு கப்பல் தளம், கடல் சார்ந்த உற்பத்தி அலகு, நிலக்கரி, உரம், சிமென்ட் கன்டெய்னர்கள் வைப்பதற்கான இடம் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
விரைவில் மேம்பாடு பணி துவங்க உள்ளது. இதனால் கடலுாரில் 500 பேருக்கு நேரடியாகவும், 1,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.