/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 11, 2024 06:18 AM

கடலுார்: ரோட்டரி கிளப் ஆப் கடலுார் சங்கமம் சார்பில், சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு
நிகழ்ச்சி கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்தது.
ரோட்டரி கிளப் ஆப் கடலுார் சங்கமத்தின் தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கி, மாணவர்கள் மொபைல் போனை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.
தொழிற்பயிற்சி நிலைய பயிற்சி அலுவலர் மகாலட்சுமி வரவேற்றார். தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் சிவராமன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன் பங்கேற்று பேசினர்.
மண்டல துணை ஆளுநர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, சிறப்பு விருந்தினராக பங்கேற்று சைபர் குற்றங்கள் குறித்து விளக்கி பேசினார்.
மேலும் சமூக வலைதளங்களில் வரும் கவர்ச்சி கரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், சைபர் குற்றங்கள் சம்பந்தமாக https://cybercrime.gov.in என்ற வெப்சைட்டில்
புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினார்.
பொருளாளர் ஞானசேகரன், உறுப்பினர்கள் சூரியமூர்த்தி, சன்பிரைட் பிரகாஷ், ரவிகுமார், பாலச்சந்தர், பிரதீரப் பங்கேற்றனர்.
ரோட்டரி கிளப் ஆப் கடலுார் சங்கமத்தின் செயலாளர் கார்த்தீசன் நன்றி கூறினார்.