/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீவளூரில் கல்வெர்ட் சேதம்: சீரமைக்க கோரிக்கை
/
தீவளூரில் கல்வெர்ட் சேதம்: சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 18, 2024 11:52 PM

பெண்ணாடம்: நல்லுார் ஒன்றியம், பெண்ணாடம் அடுத்த தீவளூர் காலனியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள தெற்கு தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வடிகால் வசதிக்காக கல்வெர்ட் பாலம் அமைக்கப்பட்டது.
பராமரிப்பின்றி உள்ள கல்வெர்ட் 8 மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். புதிய கல்வெர்ட் அமைக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே, தீவளூர் காலனியில் சேதமடைந்த கல்வெர்ட்டை சீரமைக்க ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

