/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிரான்ஸ்பார்மர் கம்பங்கள் சேதம் வடலுார் அருகே திக்.. திக்..
/
டிரான்ஸ்பார்மர் கம்பங்கள் சேதம் வடலுார் அருகே திக்.. திக்..
டிரான்ஸ்பார்மர் கம்பங்கள் சேதம் வடலுார் அருகே திக்.. திக்..
டிரான்ஸ்பார்மர் கம்பங்கள் சேதம் வடலுார் அருகே திக்.. திக்..
ADDED : ஜூன் 04, 2024 06:35 AM

வடலுார் : வடலுார் அருகே டிரான்ஸ்பர்மர் கம்பங்கள் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது.
வடலுார் அடுத்த கருங்குழி, மேட்டுக்குப்பம் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த பகுதி மக்களுக்கு வடலுார் துணை மின்நிலையம் மூலம் மின் வினியோகம் செய்யப்படுகிறது. கருங்குழியில் மின் விநியோகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.3 டிரான்ஸ்பார்மரில், கம்பங்கள் சிமென்ட் காரைகள் பெயர்ந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது.
எனவே, கிராம மக்கள் நலன் கருதி, டிரான்ஸ்பார்மரில் சேதமடைந்துள்ள கம்பங்களை அகற்றி, புதிய கம்பங்களை பொறுத்த மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.