/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அறுந்து கிடக்கும் கேபிள்களால் ஆபத்து
/
அறுந்து கிடக்கும் கேபிள்களால் ஆபத்து
ADDED : செப் 04, 2024 06:16 AM

கடலுார்: கடலுாரில் பிரதான சாலையில் அறுந்து கிடக்கும் கேபிள்களை அகற்றாததால் விபத்து அபாயம் உள்ளது.
கடலுார் மாநகர பகுதியில் இணைய தளம், கேபிள் டி.வி.,உள்ளிட்ட சேவைகளுக்காக, கேபிள்கள் மூலம் வீடுகள், அலுவலகங்களுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது.
ஆனால், இந்த கேபிள்களை முறையாக பராமரிக்காததால் கடலுார் பாரதி சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் அறுந்து கீழே தொங்குகிறது. சில இடங்களில் சாலையோரங்களில் அறுந்து குவியலாக கிடக்கிறது.
இதனால், பாதிப்பு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கேபிள்கள் வாகனங்களில் சிக்குவதால், பாதிப்பு அபாயமும் உள்ளது. எனவே, சாலையோரம் அறுந்து கிடக்கும் கேபிள்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.